Home No FB காணொலி : “அம்னோ – தேசிய முன்னணி பிளவுபடுமா?”

காணொலி : “அம்னோ – தேசிய முன்னணி பிளவுபடுமா?”

492
0
SHARE
Ad

செல்லியல் பார்வை காணொலி |அம்னோ – தேசிய முன்னணி பிளவுபடுமா? | 09 ஜூலை 2021
Selliyal Paarvai Video | UMNO – BN heading for a split? | 09 July 2021

தேசியக் கூட்டணி அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறோம் என அம்னோ உச்சமன்றம் அதிரடி முடிவெடுக்க – அதற்கு நேர்மாறாக மொகிதின் அரசாங்கத்தில் துணைப் பிரதமராக இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 9) பிரதமர் அலுவலகம் சென்று தனது பணிகளைத் தொடக்கியிருக்கிறார் இஸ்மாயில் சாப்ரி.

அம்னோவின் முடிவுக்காக சாஹிட் ஹாமிடி மீது கண்டனக் கருத்துகளைப் பதிவிட்டிருக்கின்றனர், மஇகாவின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும்!

#TamilSchoolmychoice

இந்த திருப்பங்களால் அம்னோ பிளவு படுமா – தேசிய முன்னணி உடைபடுமா?

மேற்கண்ட செல்லியல் பார்வை காணொலியில் விவாதிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.