Home நாடு கொவிட் தடுப்பூசிகள் – ஒருநாளில் 376 ஆயிரம் செலுத்தப்பட்டன

கொவிட் தடுப்பூசிகள் – ஒருநாளில் 376 ஆயிரம் செலுத்தப்பட்டன

577
0
SHARE
Ad

கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 8) நள்ளிரவு வரையில் 376,909 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.

புதன்கிழமை (ஜூலை 7) வரையில் நாடு முழுமையிலும் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியது.

நேற்று நள்ளிரவு வரையில் ஒருநாளில் செலுத்தப்பட்ட 376,909 தடுப்பூசிகளில்   222,927 முதல் தடவை போடப்பட்ட தடுப்பூசிகளாகும். எஞ்சிய 153,982 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் இரண்டாவது தடவையாகச் செலுத்தப்பட்டவையாகும்.

#TamilSchoolmychoice

மாநிலங்களைப் பொறுத்தவரை கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைப் போன்றே தடுப்பூசிகள் செலுத்துவதிலும் சிலாங்கூர் முதல் மாநிலமாக இருக்கிறது.

நேற்று ஒரு நாளில் 63,177 தடுப்பூசிகள் சிலாங்கூரில் மட்டும் செலுத்தப்பட்டிருக்கின்றன.

அடுத்த நிலையில் கோலாலம்பூரில் 36,302 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

நாடு முழுமையிலும் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

மலேசியாவுக்கு அமெரிக்காவும், ஜப்பானும் தடுப்பூசிகளை வழங்கி உதவியிருக்கின்றன.

உலகம் முழுவதும் தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்காவின் திட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு ஒரு மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் பிபைசர் ரகத்தைச் சேர்ந்ததாகும்.

ஜப்பான் அஸ்ட்ரா ஜெனிகா இரக தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஜூலை மாதத்திற்குள் மேலும் 12 மில்லியன் அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் மலேசியாவுக்குள் வந்தடையும் என கொவிட் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்திருக்கிறார்.