Home நாடு மொகிதினுக்கு ஆதரவில்லை – பெஜூவாங், வாரிசான் சபா அறிவிப்பு

மொகிதினுக்கு ஆதரவில்லை – பெஜூவாங், வாரிசான் சபா அறிவிப்பு

568
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கும் ஜூலை 26-ஆம் தேதிக்கு முன்பாக எந்தக் கட்சிகள் பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு தருவார்கள், யார் தங்களின் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்ற ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன.

துன் மகாதீர் தலைமையிலான பெஜூவாங் கட்சி, ஷாபி அப்டால் கட்சியான வாரிசான் சபா ஆகிய இரண்டு கட்சிகளும் மொகிதின் யாசினுக்குத் தாங்கள் ஆதரவு தரப் போவதில்லை என அறிவித்திருக்கின்றன.

இணைய ஊடகமான சரவாக் ரிப்போர்ட் நேற்று வெளியிட்ட செய்தி ஒன்றில் பெர்சாத்து கட்சியைத் தோற்றுவித்த துன் மகாதீர் மீண்டும் அந்தக் கட்சியோடும் தனக்குத் துரோகமிழைத்துப் பிரிந்து சென்ற மொகிதின் யாசினோடும் மீண்டும் இணையலாம் என ஆரூடம் கூறியிருந்தது.

#TamilSchoolmychoice

கொவிட் தொடர்பான தேசிய மீட்சித் திட்டக் குழுவுக்கு துன் மகாதீர் தலைமையேற்கலாம் என்ற ஆரூடத்தையும் சரவாக் ரிப்போர்ட் தெரிவித்திருக்கிறது. தேசிய மீட்சித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சரான தெங்கு சாப்ருல் அந்தத் திட்டக் குழுவில் இணைந்து பணியாற்றத் தனக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், எனினும் அது குறித்து, தான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

பெஜூவாங் கட்சியின் தலைவரான மகாதீர், இந்தத் தகவல்களை மறுத்திருக்கிறார் என பெஜூவாங் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் உல்யா அகாமா ஹூசாமுடின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதே போன்றதொரு அறிக்கையை வாரிசான் சபா கட்சியும் தனியாக விடுத்திருக்கிறது. அந்த அறிக்கையிலும் மொகிதின் யாசினுக்கு ஆதரவு தரப் போவதில்லை என அந்தக் கட்சி அறிவித்திருக்கிறது.