Home உலகம் வடமாகாண தேர்தல்: செப்டம்பர் மாதம் நடத்த ராஜபக்சே முடிவு

வடமாகாண தேர்தல்: செப்டம்பர் மாதம் நடத்த ராஜபக்சே முடிவு

540
0
SHARE
Ad

rajapakseவெலிஓயா, ஏப்ரல்  22 – இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை செப்டம்பரில் நடத்த ஜோதிடர் நல்ல நேரம் குறித்து கொடுத்திருப்பதாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

வெலிஓயா என்ற இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சே பேசுகையில், எனது ஜோதிடர் எனக்கு குறித்து கொடுத்திருக்கும் நாள் மற்றும் நேரத்தில் நிச்சயமாக வடமாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பரில் நடைபெறும்.

1987 ம் ஆண்டு மாகாண சபைகள் நிறுவப்பட்ட பின்னர் தற்போதுதான் வட மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் வரும் வரையிலும் காத்துக் கொண்டிருக்காமல் சொந்த நாட்டு மக்களின் பணத்தில் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

சிகரெட் விலைகள் அதிகரிக்கப்படும் போது யாரும் கூச்சலிடுவதில்லை. அதேபோல விற்பனையும் குறைவடைவதில்லை. ஆனால் மின்சார கட்டணத்தை அதிகரித்தவுடன் கூச்சலிடுகின்றனர் என்றார் அவர்.