Home நாடு பெர்சாத்து கட்சியின் சார்பில் துணைப் பிரதமரா? யார் அவர்?

பெர்சாத்து கட்சியின் சார்பில் துணைப் பிரதமரா? யார் அவர்?

998
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரி பிரதமராவதை அடுத்து, அனைவரின் பார்வையும் அடுத்த துணைப் பிரதமராக யாரை அவர் நியமிப்பார் என்பதில் திரும்பியுள்ளன.

மொகிதின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த ஹம்சா சைனுடின் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ஆவதற்கு முன்பாக இஸ்மாயில் சாப்ரி நடத்திய இரகசிய அரசியல் சந்திப்புக் கூட்டங்களில் ஹம்சா சைனுடின் கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவரே துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என்ற ஆரூடங்கள் எழுந்தன.

#TamilSchoolmychoice

எனினும், பெர்சாத்து கட்சிக்குள்ளேயே துணைப் பிரதமர்  பதவிக்கான மோதல்கள் தொடங்கி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹம்சா சைனுடின் பெர்சாத்து கட்சியின் தலைமைச் செயலாளராக இருக்கிறார். துணைத் தலைவராக இருப்பவர் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் பைசால் அசுமு. இவரும் துணைப் பிரதமர் பதவிக்குக் குறி வைத்திருக்கிறார். அஸ்மின் அலியும் அடுத்த துணைப் பிரதமராக அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார்.

இதற்கிடையில் அம்னோவே துணைப் பிரதமர் பதவியை வகிக்க வேண்டும் என்ற அறைகூவல்களும் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில் பெர்சாத்து கட்சியிலிருந்து யாரை துணைப் பிரதமராக நியமித்தாலும், அதற்குப் பின்னர் பெர்சாத்து உட்கட்சி மோதல்களும், அம்னோ-பெர்சாத்து இடையிலான பகைமையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.