Home நாடு கொவிட் 19 : புதிய தொற்றுகள் 20,988 – மரணங்கள் 249

கொவிட் 19 : புதிய தொற்றுகள் 20,988 – மரணங்கள் 249

874
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: இன்று  செப்டம்பர் 2-ஆம் தேதி வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20,988 ஆகப் பதிவாகின.

கொவிட் தொற்றுகளினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 249 ஆகப் பதிவாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,786,004 ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

இன்றைய மரண எண்ணிக்கையைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 17,191 ஆக உயர்ந்திருக்கிறது.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் புள்ளிவிவரங்களை மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1001 ஆகும். இவர்களில் சுவாசக் கருவிகளின் உதவியோடு 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்கள் ரீதியான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைக் மேற்கண்ட வரைபடத்தில் காணலாம்.

சிலாங்கூர் 4,073 தொற்றுகளுடன் மிக அதிகமானத் தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

பினாங்கு, கிளந்தான் ஆகிய 2 மாநிலங்களில்  ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின.

கெடா, ஜோகூர், சபா, சரவாக் மாநிலங்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமானத் தொற்றுகளைப் பதிவு செய்தன.

கோலாலம்பூர் 731 தொற்றுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal