Home நாடு இரா.பாலகிருஷ்ணன் நினைவாக மின்னல் பண்பலை-எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி

இரா.பாலகிருஷ்ணன் நினைவாக மின்னல் பண்பலை-எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி

831
0
SHARE
Ad
இரா.பாலகிருஷ்ணன்
  • மின்னல் பண்பலையும் எழுத்தாளர் சங்கமும்
    இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டி
  • இரா.பாலகிருஷ்ணன் நினைவாக ரொக்கப் பரிசு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மணி விழாவையும் மின்னல் பண்பலையில் 24 மணி நேர ஒலிபரப்பு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளை எட்டுவதையும், முன்னிட்டு தேசிய அளவில் சிறுகதைப் போட்டி நடத்தப்படுவதாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் அறிவித்தார்.

இப்போட்டியை இன்று திங்கட்கிழமை 6.10.2021ஆம் தேதி இயங்கலை வழியாக மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மின்னல் பண்பலையும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து இப்போட்டியை நடத்துவதாக அவர் சொன்னார். இப்போட்டியின் வெற்றியாளருக்கு மலேசிய வானொலி தமிழ்ப் பகுதியின் மேனாள் தலைவர் இரா.பாலகிருஷ்ணன் அவர்களின் நினைவாக வழங்கப்படும் என்று இராஜேந்திரன் சொன்னார்.

#TamilSchoolmychoice

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த அறுபதாண்டுகளாக சிறுகதை வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த 75 ஆண்டு காலமாக தமிழ்ப் பணியாற்றிவரும் அரசாங்க வானொலியான மின்னல் பண்பலை ‘வானொலி சிறுகதை’ நிகழ்ச்சியின் மூலம் எழுத்தாற்றலை ஊக்குவித்து, மாதத்தின் முதலாவது, மூன்றாவது சனிக்கிழமைகளில் சிறுகதைகளை ஒலிபரப்பி வருகிறது.

மேலும் தரமான சிறுகதைகள் கிடைக்கப்பெறுவதற்கு இப்போட்டி துணை புரியும் என்றும் இராஜேந்திரன் கூறினார்.

பெ.இராஜேந்திரன்

பத்தாண்டுகளுக்கு முன்பு, சங்கத்தின் பொன்விழாவின்போது நாட்டில் வெளிவந்த தமிழ் நாளிதழ்களோடு இணைந்து சிறுகதை, கட்டுரை, மரபுக் கவிதை, புதுக்கவிதை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

கோலாலம்பூரில் உள்ள தேசிய நூலகத்தில் இப்போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் மணி விழாவை முன்னிட்டும் இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்குவதற்கு சங்கம் முடிவு செய்திருப்பதாக இராஜேந்திரன் குறிப்பிட்டார்.

அதன் முதல் கட்டமாக சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதர ஊடகங்களுடன் அடுத்தடுத்து நடத்தப்படவிருக்கும் போட்டிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும்.

இன்று அக்டோபர் 6-ஆம் தேதி மாலை இச்சிறுகதைப் போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா இயங்கலை வாயிலாக நடைபெற்றது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணன், போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

தேர்வு செய்யப்படும் முதல் மூன்று சிறந்த படைப்புகளுக்கு முறையே 3,000.00 ரிங்கிட், 2,000 ரிங்கிட், 1000 ரிங்கிட் பரிசாக வழங்கப்படும்.

மலேசிய வானொலி தமிழ்ப் பகுதி முன்னாள் தலைவர் திரு.இரா.பாலகிருஷ்ணன் நினைவாகப் இப்பரிசுகள் வழங்கப்படும் என்று இராஜேந்திரன் குறிப்பிட்டார்.

இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் 24 கதைகள், அடுத்தாண்டு ஜனவரி தொடக்கம் மின்னல் பண்பலையில் ஒலிபரப்பாகும்.

இந்தப் போட்டிக்காக அனுப்பி வைக்கப்படும் கதைகள், தமிழில் தட்டச்சு செய்திருக்க வேண்டும். சிறுகதைகள் 6 முதல் 7 பக்கங்களில் வானொலி ஒலிபரப்புக்கு ஏற்றவகையில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் இதற்கு முன்னர் அச்சு ஊடகங்களிலோ, இணையத்திலோ பிரசுரிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. சிறுகதையின் கரு, இன, சமய உணர்வுகளை தூண்டும் வகையிலும் பிறரின் மனத்தைப் புண்படுத்தும் வகையிலும் இருக்கக் கூடாது

தேர்வு செய்யப்படுகின்ற முதல் 25 கதைகளை மின்னல் பண்பலையில் ஒலிபரப்பவும் பின்னர் நூலாக வெளியிடுவதற்கும் மின்னல் பண்பலைக்கும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் எழுத்தாளர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோருக்கு வழிகாட்டல் பட்டறையும் நடத்தப்படும் மேல் விவரங்களுக்கு 0169761624 அல்லது 0133609989 என்ற எண்களில் ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

1.10.2021 முதல் 11.11.2021ஆம் தேதி இரவு மணி 11.00 வரை கதை எழுதுவதற்கான காலக்கெடு வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்தாண்டு தை முதல் நாளில், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெற்றியாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.

சங்கத்தின் மணிவிழாவின் போது பரிசளிப்பு நடைபெறும் என்று இராஜேந்திரன் கூறினார்.