Home கலை உலகம் புதுமாப்பிள்ளை ஆகிறார் சிம்பு!

புதுமாப்பிள்ளை ஆகிறார் சிம்பு!

557
0
SHARE
Ad

simbuசென்னை, ஏப்ரல் 22- வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து படு சூட்டைக் கிளப்பினார் சிம்பு. அதையடுத்து அவர்கள் ஜாலியாக ஊர் சுற்றியதால் அவர்களை இணைத்து காதல் கிசுகிசுக்கள் வேகமாக பரவின. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களது காதல் முறிந்து போனது. இருவரும் அதன்பிறகு இணைந்து நடிப்பதைகூட தவிர்த்தனர். ஏதாவது சினிமா விழாக்களில் எதேச்சையாக சந்தித்தால்கூட முகத்தை திருப்பிக்கொண்டு ஆளுக்கொரு பக்கமாக எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். அதையடுத்து அடிக்கடி சிம்புவை முன்னணி நடிகைகளுடன் இணைத்து கிசுகிசு பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

இந்த நிலையில், இந்த மாதிரியான கிசுகிசுக்கள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிம்புவுக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் வேலைகளில் அவரது பெற்றோர் தீவிரமடைந்துள்ளனர். சமீபத்தில் வேலூரில் அவர்கள் சிம்புவுக்காக ஒரு பெண் பார்த்தார்களாம். அது மனசுக்கு திருப்தியாக இருக்க, மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்படி விரைவில் பிடித்தமான பெண் கிடைத்துவிட்டால், இந்த வருடம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சிம்புவுக்கு திருமணம் நடைபெறுமாம். ஆக, இப்போதே புதுமாப்பிள்ளை களை சிம்புவின் முகத்தில் தாண்டவமாடத் தொடங்கி விட்டது.