புத்ரா ஜெயா : நீண்ட காலப் போராட்டமாகவும், இழுபறியாகவும் இருந்து வந்த 18 வயதினருக்கான வாக்களிப்பு என்பது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 15 முதல் இந்தத் திட்டம் அமுலாக்கப்படும். இதற்கான அரசாங்கப் பதிவேட்டில் அரசாங்கத் தலைமைச் செயலாளர் முகமட் சுக்கி அலி நவம்பர் 25-ஆம் தேதி கையெழுத்திட்டிருக்கிறார். அந்த ஆவணம் இன்று அதிகாரபூர்வமாக அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.
எனினும், எதிர்வரும் டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் 18 வயதினர் வாக்களிக்க முடியாது என நம்பப்படுகிறது. சரவாக் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே 18 வயதினருக்கான திட்டம் அமுலாக்கம் காண்கிறது.
எனவே, எந்தத் தேதியிட்ட வாக்காளர் பட்டியலைக் கொண்டு சரவாக் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தப் போகிறது என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.