Home நாடு மின்னல் பண்பலையின் வெள்ள நிவாரண உதவிகள்

மின்னல் பண்பலையின் வெள்ள நிவாரண உதவிகள்

960
0
SHARE
Ad

சமுதாயக் கடப்பாட்டோடு மீண்டும் மக்களுடன் கைக்கோர்த்து களம் இறங்குகின்றது மின்னல் பண்பலை. வெள்ள நிவாரண உதவிகளுக்காக மின்னலின் DRIVE THRU TRUCK என்னும் “வாகனம் செலுத்திச் செல்லும்” திட்டத்தின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேயர்கள் உதவ விரும்பினால் ஜனவரி 2ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள்,  பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிப் பொருட்களை மின்னல்fm-ன் DRIVE THRU TRUCK-ல் சேர்க்கலாம்.

ஆர்.டி.எம், அங்காசாபுரி நுழைவாயிலில் இந்த TRUCK (வாகனம்) நேயர்களுக்காகக் காத்திருக்கும். நேயர்கள் உங்கள் வாகனத்திற்குள் இருந்தபடியே நீங்கள் எடுத்து வந்த உதவிப் பொருட்களை மின்னல் அறிவிப்பாளர்களிடம் கொடுக்கலாம். உங்கள் பொருட்களை பாதிக்கப்பட்டோரிடம் சென்று சேர்க்க மின்னலின் அறிவிப்பாளர்கள் காத்திருப்பர்.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு உட்பட்டு வெள்ள நிவாரண உதவிகளுக்காக மின்னல்fm-ன்  DRIVE THRU TRUCK திட்டம்.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்போம். கரம் கோர்ப்போம், சேர்ந்தே உதவுவோம் என மின்னல் வானொலி அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

#நமக்குநாமே