Home நாடு ஜோகூர் தேர்தலை எதிர்கொள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தயார்

ஜோகூர் தேர்தலை எதிர்கொள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தயார்

804
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : விரைவில் நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி (MAP-எம்ஏபி) தயார் என அக்கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் (படம்) அறிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில சட்டமன்றத்திற்கு போட்டியிட மலேசிய முன்னேற்றக் கட்சியின் தேர்தல் இயந்திரம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஓர் அரசியல் கட்சி என்னும் முறையில் எம்ஏபி தலைவர்களும் தொண்டர்களும் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி தங்களின் தாக்கத்தை பதிவு செய்ய தயாராக இருப்பதாக மோகன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் ஈடுபட்டு அவற்றின்வழி கிடைத்துள்ள அனுபவம், கட்டமைப்பு மற்றும் இந்திய சமுதாயம் அளித்துவரும் பேராதரவையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்தலில் களமிறங்கி ஜோகூர் மாநில நிர்வாகத்தில் தன்னுடைய பங்களிப்பை செலுத்த முடியும் என்று எம்ஏபி நம்புகிறது.

இதனிடையே, எம்ஏபி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பல தரப்பினரிடமிருந்தும், ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்படி ஆதரவுக் குரல் எழுந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைப்பெற்று வருகிறது.

ஜோகூரில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் எம்ஏபி வலுவாக உள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை அடுத்தக் கட்டத்தை எட்டினால் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் சாத்தியம் உள்ளதென்று எம்ஏபி தேசிய உதவித் தலைவருமான எ.மோகன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.