Home நாடு லோ சியூ ஹோங் 3 பிள்ளைகளின் ஒருதலைப் பட்ச மத மாற்றத்தை எதிர்த்து வழக்கு

லோ சியூ ஹோங் 3 பிள்ளைகளின் ஒருதலைப் பட்ச மத மாற்றத்தை எதிர்த்து வழக்கு

551
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கணவனால் பல்வேறு குடும்பத் தொல்லைகளை எதிர்நோக்கிய தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங், தன் வாழ்க்கையின் அடுத்த கட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

ஒருதலைப் பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்ட தன் 3 குழந்தைகளை மீண்டும் இந்து சமயத்திற்கு மீட்டுக் கொண்டு வரும் போராட்டம்தான் அது.

இதனை அவரின் வழக்கறிஞரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

நாளை திங்கட்கிழமை (பிப்ரவரி 21) அவரின் ஹேபியஸ் கோர்ப்பஸ் என்னும் ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.