Home உலகம் டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் பிரதேசங்கள் இனி தனிநாடுகள் – புடின் அதிரடி

டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் பிரதேசங்கள் இனி தனிநாடுகள் – புடின் அதிரடி

754
0
SHARE
Ad

மாஸ்கோ : உக்ரேனுடனான மோதலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடி முடிவு ஒன்றை இன்று அறிவித்தார். அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளன.

கிழக்கு உக்ரேனில் உள்ள சர்ச்சைக்குரிய இரண்டு பிரதேசங்களான டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகியவை இனி சுதந்திர நாடுகள் என்ற அறிவிப்புதான் அது.

இதைத் தொடர்ந்து ரஷிய இராணுவத்தை டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகிய பிரதேசங்களுக்கு அனுப்பும் உத்தரவையும் புடின் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

புடினின் அறிவிப்பு ஏற்கனவே நீடித்து வரும் உக்ரேன் பிரச்சனையை மேலும் மோசமாக்கியுள்ளது.

உக்ரேனின் கிழக்குப் பகுதியில் டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் என்னும் 2 பிரதேசங்களில் ரஷியாவின் ஆதரவிலான கிளர்ச்சியாளர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ரஷியா ஆதரவு தந்து வருகின்றது.