Home உலகம் உக்ரேன் தாக்குதல் : உலக சந்தைகள் சரிவு

உக்ரேன் தாக்குதல் : உலக சந்தைகள் சரிவு

622
0
SHARE
Ad
விளாடிமிர் புடின்

மாஸ்கோ : உக்ரேன் மீதான இராணுவத் தாக்குதலை ரஷியா தொடங்கியிருக்கும் நிலையில், உலகளாவிய நிலையில் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. ஒவ்வொரு தடைக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரேன்-ரஷியா மோதலினால் எண்ணெய் விலைகள் மேலும் உயர்வடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

சவுதி அரேபியாவுக்கு அடுத்து உலகிலேயே அதிக அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷியா இரண்டாவது நிலையில் இருந்து வருகிறது.

விளாடிமிர் புடினின் அதிரடி நடவடிக்கைகள்                                                                                              உக்ரேனுடனான மோதலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் இராணுவத் தாக்குதல் நடத்தும் அதிரடி முடிவை எடுத்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளன.

கிழக்கு உக்ரேனில் உள்ள சர்ச்சைக்குரிய இரண்டு பிரதேசங்களான டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகியவை இனி சுதந்திர நாடுகள் என புடின் அறிவித்ததைத் தொடர்ந்து ரஷியத் துருப்புகள் உக்ரேனின் சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் நுழைந்தன.

ரஷிய இராணுவத்தை டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் ஆகிய பிரதேசங்களுக்கு அனுப்பும் உத்தரவையும் புடின் அறிவித்தார்.

புடினின் அறிவிப்பு ஏற்கனவே நீடித்து வரும் உக்ரேன் பிரச்சனையை மேலும் மோசமாக்கியுள்ளது.

உக்ரேனின் கிழக்குப் பகுதியில் டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் என்னும் 2 பிரதேசங்களில் ரஷியாவின் ஆதரவிலான கிளர்ச்சியாளர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ரஷியா ஆதரவு தந்து வருகின்றது.