Home Photo News “பீஸ்ட்” – படத்தில் கலக்கும் பூஜா ஹெக்டே

“பீஸ்ட்” – படத்தில் கலக்கும் பூஜா ஹெக்டே

739
0
SHARE
Ad

தமிழ்த் திரைப்பட இரசிகர்கள் அடுத்து ஆவலுடன் காத்திருப்பது விஜய் நடிப்பில் – நெல்சன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “பீஸ்ட்” திரைப்படம்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே ஏற்கனவே தெலுங்கில் பிரபலமானவர். சில இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் பாடலாக வெளியிடப்பட்டிருக்கும் அரபிக் குத்து பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகியிருக்கிறது. அதில் பூஜா ஹெக்டேயின் நடன அசைவுகளும் இரசிகர்களைக் கிறங்கடித்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

சமூக ஊடகங்களிலும் பிரபலமாக இருக்கும் பூஜா ஹெக்டே தனது படங்களைத் தொடர்ந்து சமூக ஊடகத் தளங்களில் பதிவிட்டு வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்டிருக்கும் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: