Home உலகம் ரஷியாவின் அட்டூழியம் – புடின் போர்க்குற்றவாளி என பைடன் சாடல்

ரஷியாவின் அட்டூழியம் – புடின் போர்க்குற்றவாளி என பைடன் சாடல்

523
0
SHARE
Ad
ரஷிய அதிபர் – விளாடிமிர் புடின்

கீவ் (உக்ரேன்) – எதிர்பாராதவிதமாக ரஷியா உக்ரேன் போரில் தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது. மெல்ல, மெல்ல கீவ் நகரையும் அதன் சுற்றுப் புற நகர்களையும் விட்டு ரஷிய இராணுவம் வெளியேறத் தொடங்கியிருக்கிறது.

எனினும் அந்த வெளியேற்றத்தின்போது பூச்சா நகரில் ரஷிய இராணுவம் கொடூரமானத் தாக்குகதல்களைப் பொதுமக்களை நோக்கி நிகழ்த்தியிருக்கிறது. இதனால் பலர் மரணமடைந்திருக்கின்றனர்.

வீதியெங்கும் மக்களின் பிணங்கள் சிதறிக் கிடப்பதாகவும், கூட்டம் கூட்டமாக சடலங்கள் புதைக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புடினைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.  புடின் ஒரு போர்க்குற்றவாளி -அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் – அதற்கான எல்லா முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உக்ரேனுக்குத் தேவையான எல்லா ஆயுதங்களையும் அமெரிக்காவும் நட்பு நாடுகளும் தொடர்ந்து வழங்கும் என்றும் பைடன் உறுதியளித்தார்.

இதற்கிடையில் ரஷிய அதிபருக்கு நெருக்கமான கோடீஸ்வரர் ஒருவரின் உல்லாசக் கப்பல் ஒன்றை அமெரிக்கா, ஸ்பெயின் கடலோரப் பகுதியில் கைப்பற்றியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.