Home நாடு அன்வார் – நஜிப் இடையிலான பொது விவாதம் நடைபெறுமா?

அன்வார் – நஜிப் இடையிலான பொது விவாதம் நடைபெறுமா?

500
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசிய அரசியலில் பொது விவாதங்கள் பகிரங்கமாக நடத்தப்படுவது வெகு அபூர்வமே! அண்மைய சில நாட்களாக சபுரா நிறுவனம் தொடர்பான வாக்குவாதங்கள் முற்றி, இப்போது நஜிப்புக்கும், அன்வார் இப்ராகிமுக்கும் இடையிலான பொது விவாதம் ஒன்றை நோக்கி செல்லத் தொடங்கியிருக்கிறது.

“நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் சவாலை ஏற்கிறேன். நஜிப்புடன் விவாதம் நடத்தத் தயார்” என அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

நஜிப்பும் சவாலை ஏற்று விவாதம் நடத்தத் தயார் என சமூக ஊடகங்களின் வழி அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

எனினும் பொது விவாதம் எப்போது நடைபெறும், இதற்கான காவல் துறை அனுமதி கிடைக்குமா என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.