Home நாடு தெங்கு சாப்ருல் அம்னோ உறுப்பினர் – 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்!

தெங்கு சாப்ருல் அம்னோ உறுப்பினர் – 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்!

588
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நடப்பு நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் அம்னோ உறுப்பினர் என்ற விவரத்தை அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் அறிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில் தெங்கு சாப்ருல் போட்டியிடக் கூடும் எனவும் அவர் கோடி காட்டியுள்ளார்.

தெங்கு சாப்ருல் தலைநகர் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கோலசிலாங்கூர் தொகுதியைக் குறிவைத்திருக்கிறார் என்றும் ஏற்கனவே ஆரூடங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

தெங்கு சாப்ருல், மொஹிதின் யாசின் பிரதமரானபோது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். நிதியமைச்சராவதற்கு முன்பு அவர் சிஐஎம்பி வங்கியின் தலைமைச் செயலதிகாரியாக செயல்பட்டிருக்கிறார்.