Home உலகம் உக்ரேன் மீதான தாக்குதலை அதிகரித்த ரஷியா – வெடிக்கும் போராட்டங்கள்

உக்ரேன் மீதான தாக்குதலை அதிகரித்த ரஷியா – வெடிக்கும் போராட்டங்கள்

472
0
SHARE
Ad

மாஸ்கோ : உக்ரேனுக்கு எதிரான போரில் பின்னடைவைச் சந்தித்து வரும் ரஷியா, கூடுதலாக 3 இலட்சம் இராணுவத்தினரை போரில் ஈடுபடுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து ரஷியாவில் பொதுமக்களிடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. பல நகர்களில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

800-க்கும் மேற்பட்டோர் ரஷியக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

அனைத்துலக அளவிலும் பல நாடுகள் புடின் முடிவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது போர் தொடுக்கும் நேரமல்ல என அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கருத்துரைத்திருந்தார்.

அண்டை நாடுகளில் சீனா மட்டுமே, ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.