Home நாடு மஇகா 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடலாம்

மஇகா 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடலாம்

439
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மஇகா 12 தொகுதிகளில் போட்டியிடத் திட்டம் வகுத்து வருவதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2018 பொதுத் தேர்தலில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் மஇகா போட்டியிட்டது.

இந்த முறை 12 தொகுதிகளில் போட்டியிட மஇகா இலக்கு கொண்டுள்ளது.

கெராக்கான் கட்சி தேசிய முன்னணியில் இருந்து விலகி விட்டதால், 14-வது பொதுத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிட்ட தொகுதிகளை அம்னோ, மசீச, மஇகா மூன்று கட்சிகளும் பிரித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, மஇகாவுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.