Home நாடு சாஹிட் வழக்கில் மேல்முறையீடு செய்வதா? சட்டத் துறைத் தலைவர் ஆராய்கிறார்!

சாஹிட் வழக்கில் மேல்முறையீடு செய்வதா? சட்டத் துறைத் தலைவர் ஆராய்கிறார்!

418
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் துணைப் பிரதமரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் மீதான 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்தும் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அந்த வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா என்ற முடிவை எடுக்க தீர்ப்பின் முழு விவரங்களையும் சட்டத் துறை அலுவலகம் ஆராய்ந்து வருகிறது. இந்தத் தகவலை சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹாருண் தெரிவித்துள்ளார்.

அராசங்கத் தரப்பு வழக்கறிஞர்களுடன் பேச்சு நடத்திய பின்னரும், தீர்ப்பை ஆராய்ந்த பின்னரும் மேல்முறையீட்டை சமர்ப்பிப்பதா இல்லையா என்ற முடிவை எடுக்கவிருப்பதாகவும் இட்ருஸ் ஹாருண் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

விஎல்என் எனும் வெளிநாட்டு விசா நடைமுறை திட்டம் தொடர்பில் 40 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தார் அம்னோ தேசியத்தலைவர் சாஹிட் ஹாமிடி.

அவர் மீதான எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும்  எதிர்வாதம் செய்ய அழைக்கப்படாமலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஷாஆலம் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் யாஸிட் முஸ்தாபாவின் இந்த தீர்ப்பு நாடு முழுமையிலும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசு தரப்பு, சாஹிட்டுக்கு எதிரான அடிப்படை வழக்கை நம்பகத்  தன்மையோடு நிரூபிக்கத் தவறிவிட்டது என தன் தீர்ப்பில் நீதிபதி கூறியிருக்கிறார்.

எனினும் ஒரு நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை பல பேருக்குக் கொடுத்திருக்கும் நிலையில் அதன் தொடர்பில் இதுவரை யார் மீதும் ஊழல் விசாரணைகள் நடத்தப்படாதது கேள்விகளை எழுப்பியிருக்கிறது.