Home நாடு அம்னோ சிறப்புக் கூட்டம் – தலைவர்களை பிரதமரும் சாஹிட்டும் சந்திக்கின்றனர்

அம்னோ சிறப்புக் கூட்டம் – தலைவர்களை பிரதமரும் சாஹிட்டும் சந்திக்கின்றனர்

525
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 4-ஆம் தேதி அம்னோவின் தொகுதிகளின் தலைவர்களுடனான கூட்டம் ஒன்றுக்கு அம்னோ தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

அம்னோவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாமிட் ஹாமிடியும், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியும் அம்னோ தலைவர்களைச் சந்தித்து விளக்கமளிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வாணிப மண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

கட்சியின் உதவித் தலைவரும் பிரதமருமான இஸ்மாயில் சாப்ரி, நாடாளுமன்றம் கலைக்கப்படும் தேதி குறித்து விவாதிக்க மாமன்னரைச் சந்திக்க அம்னோ தலைமைத்துவம் ஒப்புக்கொண்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.