பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளராக சைபுடின் செயலாற்றியிருக்கிறார். இந்த ஆண்டு நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் ரபிசி ரம்லியை எதிர்த்து சைபுடின் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.
எனினும் அவருக்கு மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தகவலை அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
2018 பொதுத் தேர்தலில் கூலிம் பண்டார் பாரு தொகுதியில் போட்டியிட்ட சைபுடின் 4,860 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
Comments