Home நாடு குன்றாத நன்மையையும், வற்றாத வலிமையையும் நமக்குள் கொண்டு வரட்டும் – விக்னேஸ்வரன் தீபாவளி வாழ்த்து

குன்றாத நன்மையையும், வற்றாத வலிமையையும் நமக்குள் கொண்டு வரட்டும் – விக்னேஸ்வரன் தீபாவளி வாழ்த்து

460
0
SHARE
Ad

தீபாவளித் திருநாளை முன்னிட்டு டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள் நம்மிடையே தீமைகள் அனைத்தையும் வென்றெடுத்து, நன்மையின் ஆற்றலைக் கொண்டாடும் பொன்னாளாக இருக்க வேண்டும் என்பதுடன், இத்தீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தமது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக மஇகாவின் தேசியத் தலைவரும், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியப் பிரதமரின் சிறப்புத் தூதருமான மாண்புமிகு டான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் அவர்கள் பத்திரிகையில் விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.

உயிர்களின் மூலமாக விளங்கும் சூரியனின் ஆற்றலை பிரதிபலிக்கும் விதத்தில்தான் விளக்குகள் ஏற்றி வைக்கப்படுகிறது. அந்த வகையில் நம் ஒவ்வொருவரின் இல்லத்திலும் தீபங்கள் ஏற்றி இந்த ஆண்டின் தீபாவளியைக் கொண்டாடுவோம்.

அதேவேளையில், நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் விரைவில் வரவிருப்பதால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மஇகா முன்னெடுத்துள்ளது. எனவே, நமக்காக திட்டமிடும் கட்சிக்காக, நமக்காக அமல்படுத்தும் கட்சிக்காக நாம் வாக்களித்தால் மட்டுமே, நமது உரிமைகளையும், சலுகைகளையும் இந்நாட்டின் இந்தியச் சமுதாயத்திற்காக நாம் உரிமையுடன் பெற முடியும். மஇகா ஒட்டுமொத்த இந்தியர்களின் கல்வி, தமிழ்ப்பள்ளி, சமூக நலன், பொருளாதாரம் ஆகியவற்றில் நம் சமுதாயம் – நம் கடமை என்ற மந்திரச் சொல்லின் பொருளை உணர்ந்து செயலாற்றி வருகின்றது. இந்த நோக்கத்தை ஒவ்வொரு இந்தியரின் இதயத் துடிப்பிலும் கலந்திருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

நாம் முன்னெடுக்கும் திட்டங்கள் அனைத்துமே எதிர்கால சந்ததியினருக்கும் பயன்பெற வேண்டும் என்ற அசைக்க முடியாத நிலைப்பாட்டினை மஇகா கொண்டிருக்கிறது. இந்த நோக்கத்தினை இந்தியச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் மனத்தில் கொண்டு, வரக்கூடிய 15-ஆவது பொதுத் தேர்தலில் நமது பலத்தினையும், வலுவினையும் காட்டும் வகையில், அந்தந்த மாநிலத்தில் போட்டியிடும் நமது மஇகாவின் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரு மனதாக வாக்களித்து, அவர்களை வெற்றிப் பெற செய்ய வேண்டுமென்று இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன். இந்திய வாக்காளர்கள் இதனை செய்தால் மட்டுமே ஒற்றுமையின் வழி அந்தந்த மாநிலத்திலுள்ள இந்தியர்களின் வாழ்க்கையினை மேம்படுத்த முடியுமென்று நம்புகிறேன்.

எனவே, நம் அனைவரின் வாழ்விலும் உள்ள சிக்கல்களும் தீமைகளும் அகன்று, நன்மைகள் பிறந்து நாமனைவரும் ஒற்றுமையாக, ஒரே குரலாக இந்நாட்டில் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்!

இந்த நன்னாளில் இந்தத் தீபாவளியை நாம் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.