Home நாடு அன்வார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றார்

அன்வார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்றார்

493
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : ஒருநாளுக்கு முன்னர் பிரதமர் ஆவாரா இல்லையா என்ற கேள்விக் குறிகள் எங்கும் எழுப்பப்பட்டிருந்த வேளையில் இப்போது பிரதமராகி விட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அடுத்தடுத்து பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறத் தொடங்கியுள்ளார்.

ஜிபிஎஸ் கூட்டணி அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாவின் ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் கட்சியும், மற்ற சில சபா கட்சிகளும் அன்வாருக்கு தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளன.

இதைத் தொடர்ந்து அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தற்போது அன்வார் கொண்டிருக்கிறார் என ஊடகங்கள் தெரிவித்தன.