Home நாடு அன்வார் புதிய மெர்சிடிஸ் காரைத் தவிர்த்தார் – விலையுயர்ந்த காலணிகளுக்கு விளக்கம்

அன்வார் புதிய மெர்சிடிஸ் காரைத் தவிர்த்தார் – விலையுயர்ந்த காலணிகளுக்கு விளக்கம்

346
0
SHARE
Ad
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் மாமன்னருடன் அன்வார் இப்ராகிம்

புத்ரா ஜெயா : பிரதமர் என்பவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதற்கு தானே முன்னோடியாக செயல்பட வேண்டும் என அடுத்தடுத்து அதிரடித் திட்டங்களை அறிவித்து வருகிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்பாக பிரதமர் அலுவலகம் புதிய S600 ரக மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை பிரதமரின் பயன்பாட்டுக்காக வாங்கியிருப்பதாகவும், அந்தக் காரைப் பயன்படுத்தத் தான் மறுத்துவிட்டதாகவும் அன்வார் தன் முகநூலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) பதிவிட்டார்.

“எனக்காக, புதிய செலவினங்கள் அரசாங்கத்தில் ஏற்படுத்தக்கூடாது என்ற கொள்கையைச் செயல்படுத்துவதற்காக, அந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். தற்போது பிரதமர் அலுவலகத்தில் ஏற்கனவே பயன்பாட்டுக்காக இருக்கும் கார்களை மட்டும் தினசரி அலுவல்களுக்காகப் பயன்படுத்த நான் முடிவு செய்திருக்கிறேன்” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் தான் அணிந்திருந்த விலையுயர்ந்த காலணிகள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்திக்கும் அன்வார் விளக்கமளித்தார்.  அந்தக் காலணிகள் ஜோகூர் சுல்தான் தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தவை என்றும் அவர் தெரிவித்தார்.