Home இந்தியா உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்

உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்

788
0
SHARE
Ad

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் கடந்த புதன்கிழமை டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக அவருக்குப் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையில், நேற்று வியாழக்கிழமை நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது பத்திரிகை நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். அப்போது, அமைச்சரானதற்கு உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

திருப்பதி தரிசனம் முடிந்ததும் கடப்பாவில் உள்ள ஒரு தர்காவுக்கு ரஜினி, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடன் செல்லவிருப்பதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யா அடுத்து ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்குகிறார். அந்தப் படத்தின் வெற்றிக்காக ரஜினி இந்த ஆன்மீக தரிசனங்களை மேற்கொள்கிறார் என்றும் ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.