Home நாடு மலாக்காவுக்கு புதிய முதலமைச்சரா?

மலாக்காவுக்கு புதிய முதலமைச்சரா?

581
0
SHARE
Ad

மலாக்கா: அடுத்த ஆண்டு ஜனவரி 3 முதல் மலாக்கா மாநில முதலமைச்சராக டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி தொடர மாட்டார் என எதிர்பார்க்கபடுகிறது. இதுகுறித்து எழுந்த ஆரூடங்களுக்கு முகமட் அலி தெளிவற்ற பதிலை அளித்துள்ளார்.

ஜனவரி 3, 2023 அன்று புதிய முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உள்ளூர் சீன நாளிதழில் வெளியான செய்தி குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

சுலைமான் மாற்றப்படுவதற்கு தேசிய முன்னணி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியும், பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியும் இணைந்து புதிய மாநில நிர்வாகத்தை அமைக்கக் கூடும் என்ற சாத்தியமும் நிலவுகிறது.

கடந்த வாரம் நடப்பு முதல்வர் சுலைமான் தனது அலுவலகத்தில் இருந்து தனது உடமைகளை அகற்றிவிட்டதாகவும் ஊகங்கள் பரவின.

அவர் முன்பு முதலமைச்சராக இருந்தபோது, 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தேசிய முன்னணி- பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான மாநில அரசாங்கம்  அக்டோபர் 4, 2021 அன்று கவிழ்ந்தது.

பின்னர் 2021 நவம்பரில் நடைபெற்ற மலாக்கா மாநில சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றியைப் பெற்றது. சுலைமான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.

அதன் பிறகு சுலைமானைப் பதவியில் இருந்து வீழ்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தொடர்ந்து ஊகங்கள் பரவி வருகின்றன.