
மாஸ்கோ : உக்ரேன் மீது போர் தொடுத்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் ரஷிய அதிபர் புடின் தடுமாறுகிறார். இதனால் அவரின் அரசியல் அதிகாரம் எதிர்ப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அவரின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
புடினுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளை புடின் தற்காலிகமாக அடக்கி விட்டாலும், நீறுபூத்த நெருப்பாக அவருக்கு எதிரான எதிர்ப்பு வளையங்கள் பின்னப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.