Home நாடு ஹாடி அவாங் பிரச்சாரம் மீது காவல் துறை விசாரணை

ஹாடி அவாங் பிரச்சாரம் மீது காவல் துறை விசாரணை

462
0
SHARE
Ad
ஹாஜி ஹாடி அவாங்

ஜோகூர் பாரு: பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சிம்பாங் ஜெராம் பிரச்சாரத்தின்போது ஆற்றிய உரை தொடர்பாக காவல் துறையினர் அவர் மீது விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

ஹாடி அவாங், அவர் ஆற்றிய உரையை விசாரிக்கும் காவல்துறைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளார் என அவரின் அரசியல் செயலாளர் சியாஹிர் சுலைமான் தெரிவித்தார்.

ஜோகூரில் உள்ள சிம்பாங் ஜெராமில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹாடியின் பேச்சு குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 26), ஹாடி ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோது ஒரு சில உறுப்பினர்களும் முன்னாள் கட்சித் தலைவர்களும் பாஸ் கட்சியை விட்டு வெளியேறி அமானாவை தோற்றுவித்தார்கள் ஏனெனில் அவர்கள் தேர்தலில் தோல்வியடைவோம் என்று பயந்தனர் எனக் கூறியிருந்தார்.

ஜசெகவும் பக்காத்தான் ஹாரப்பானில் இணைந்து மத்திய அரசாங்கத்தை அமைத்ததால் அந்தக் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்க்க தான் முயற்சிகள் எடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

எந்த அம்சங்களின் அடிப்படையில் அவர் மீது காவல் துறை விசாரணை முடுக்கி விட்டுள்ளது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.