Home நாடு சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை எதிர்த்து  பாஸ் கட்சி போட்டி

சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை எதிர்த்து  பாஸ் கட்சி போட்டி

355
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: கடந்த ஜூலை 23-ஆம் தேதி மறைந்த முன்னாள் அமைச்சர் சாலாஹூடின் அயூப் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தவர். அவரின் மறைவால் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெறுகிறது. வாக்களிப்பு செப்டம்பர் 9-ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பாக்ரி நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் சிம்பாங் ஜெராம் ஒன்றாகும். அமானா – பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளராக பாக்ரி நாடாளுமன்றத் தொகுதியின் துணைத் தலைவர் நஸ்ரி அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார். அவர் ஒரு பொறியியலாளர் (என்ஜினியர்) ஆவார்.

பாஸ் கட்சி சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிடுபவர் டாக்டர் முகமட் நஸ்ரி யாஹ்யா. அவர் ஓர் அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணராவார்.

#TamilSchoolmychoice

சலாஹூடின் அயூப் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கலும் நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெறுகிறது.

ஒற்றுமை அரசாங்கம் அடிப்படையில் தேசிய முன்னணி இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு பக்காத்தான் ஹாரப்பானுக்கு ஆதரவு தருகிறது.