Home நாடு பினாங்கு, சபா மாநிலங்களில் பணப் பற்றுச்சீட்டுகள் விநியோகம் – விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன் அன்வார்

பினாங்கு, சபா மாநிலங்களில் பணப் பற்றுச்சீட்டுகள் விநியோகம் – விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன் அன்வார்

502
0
SHARE
Ad

Anwar-feature---4

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 25 – பினாங்கு மற்றும் சபா மாநிலங்களில் வாக்குகள் வாங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் அந்த ஆதாரங்கள் அடங்கிய ஒளிநாடாவை வெளியிடப்போவதாகவும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், தேசிய முன்னணியால் பினாங்கில் வழங்கப்பட்ட 50 ரிங்கிட்டுக்கான பற்றுச்சீட்டும், சபாவில் வழங்கப்பட்ட 1000 ரிங்கிட்டுக்கான பற்றுச்சீட்டும் தங்களிடம் உள்ளதாகவும், தேர்தலில் தோல்வியுறும் பயம் காரணமாகவே தேசிய முன்னணி இது போன்று பற்றுச்சீட்டுகளையும், பரிசுப்பொருட்களையும் மக்களிடம் வழங்கி வருகிறது என்றும் அன்வார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

வாக்குப்பெட்டிகளை ஏற்றிவந்த வாகனம் திசை திருப்பம்anwar22-300x225

புத்திர ஜெயா தேர்தல் ஆணையத் தலைமையகத்திலிருந்து வாக்குப்பெட்டிகளை ஏற்றி வந்த வாகனம் ஒன்று இடையிலேயே நிறுத்தப்பட்டு, காஜாங்கிலுள்ள சுங்கை சுவா தொழிற்பேட்டையில் உள்ள ரகசிய இடத்திற்கு திசை திருப்பிவிடப்பட்டது ஏன் என்றும் அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த ரகசிய இடத்தில் தேர்தல் ஆணையத்தின் முத்திரையுடன் கூடிய பெரிய பாலிஸ்டர் பைகள் இறக்கப்பட்டதாகக் கூறிய அன்வார், அந்த பாலிஸ்டர் பைகளின் புகைப்படங்களையும் ஊடகங்களிடம் காண்பித்தார்.

மேலும் இது போன்று சந்தேகத்திற்குரிய பல காரியங்கள் ரகசியமாக நடந்து வருவதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

சிலாங்கூரில் அந்நிய வாக்காளர்கள்

சபாவைத் தொடர்ந்து சிலாங்கூரிலும் அந்நிய வாக்காளர்களின் பெயர்கள் வாக்குப் பட்டியலில் அதிகம் இருப்பதாகவும், அதில் கோம்பாக், அம்பாங் நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டும் 4,324 அந்நிய வாக்காளர்கள் இருப்பதாக அன்வார் தெரிவித்தார்.

மேலும் சபா மாநிலத்தில் சிலாம், கலாபாக்கான், சிபங்கார், தாவாவ், புத்தான் ஆகிய நாடாளுமன்ற  தொகுதிகளில் 15,907 அந்நியர்கள் வாக்காளர்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்றும்அன்வார் விளக்கமளித்தார்.

அந்நியவாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் பிலிப்பின்ஸ், பாகிஸ்தான், இந்தோனிசியா, வங்காள தேசம்  ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 16, 589 பேர் சபாவில் பிறந்தவர்கள் போல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அன்வார், தேர்தல் ஆணையம் உடனடியாக இவ்விவகாரத்தைக் கருத்தில் கொண்டு போலி வாக்காளர்களை அப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.