Home இந்தியா செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில்…

செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில்…

924
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தற்போது புழல் சிறையில் தடுப்புக் காவலில் இருந்து வருகிறார். அங்கு அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்.

அவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து தற்போது ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

#TamilSchoolmychoice

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.