Home நாடு “பெர்சாத்து தலைவர் பதவியை இன்னும் ஒரு தவணைக்கு மட்டும் வகிப்பேன்” – மொகிதின் யாசின்

“பெர்சாத்து தலைவர் பதவியை இன்னும் ஒரு தவணைக்கு மட்டும் வகிப்பேன்” – மொகிதின் யாசின்

329
0
SHARE
Ad

ஷா ஆலாம் : பெர்சாத்து கட்சித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் – அடுத்த ஆண்டுடன் பதவி விலகுவேன் – என அறிவித்த டான்ஸ்ரீ  மொகிதின் யாசின் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.

பெர்சாத்து உச்சமன்றம் அவரின் பதவி விலகலை நிராகரித்து அவரே கட்சித் தலைவராகத் தொடர வேண்டும் என முடிவெடுத்தது. அதைத் தொடர்ந்து தன் துணைவியார் கேட்டுக் கொண்டதற்கிணைங்க மேலும் ஒரு தவணைக்கு மட்டும் பெர்சாத்து கட்சி தலைவராகப் பதவியில் நீடிக்க ஒப்புக் கொள்வதாக மொகிதின் தெரிவித்தார்.

துன் மகாதீருடன் இணைந்து பெர்சாத்து கட்சியைத் தோற்றுவித்து தற்போது அதன் தலைவராகவும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் செயல்பட்டு வருகிறார்.

#TamilSchoolmychoice

மீண்டும் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடப் போவதில்லை என பெர்சாத்து ஆண்டுப் பொதுப் பேரவையில் அறிவித்தார்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் பெர்சாத்து கட்சியின் தேர்தல்கள் நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெறும்போது தனது தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடப் போவதில்லை என ஷா ஆலாமில் நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) நடைபெற்ற அந்தக் கட்சியின் ஆண்டுப் பொதுப் பேரவையில் மொகிதின் யாசின் அறிவித்தார்.

பெர்சாத்து தலைமைத்துவத்தை அடுத்த கட்டத் தலைவர்களிடம் விட்டுக் கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும் மொகிதின் யாசின் தெரிவித்தார்.