6 துப்பாக்கிகள், 200 துப்பாக்கிக் குண்டுகளுடன் அந்த இஸ்ரேலிய உளவாளி தங்கும் விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவர் பிரான்ஸ் நாட்டின் அதிகாரத்துவ அனைத்துலகக் கடப்பிதழை வைத்திருந்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. பாதுகாப்பு கவசத்துடன் கூடிய காவல் துறை வாகனத்தில், மேலும் 6 காவல் துறை வாகனங்கள் புடைசூழ இஸ்ரேலிய உளவாளி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
கறுப்பு நிற டி-சட்டை, கறுப்பு முகக் கவசத்துடன் அவிதான் இன்று காலை 8.11 மணியளவில் நீதிமன்றத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.