Home இந்தியா அஜித், 7.00 மணிக்கு முன்பாகவே வாக்களிக்க வந்தார்!

அஜித், 7.00 மணிக்கு முன்பாகவே வாக்களிக்க வந்தார்!

318
0
SHARE
Ad

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை 7.00 மணி முதல் தமிழ் நாட்டுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் முதல் நபராக திருவான்மியூர் பகுதியில் உள்ள வாக்களிப்பு மையத்துக்கு வருகை தந்து வாக்களித்தார்.

அவர் வாக்களிக்க வந்த சமயத்தில் வாக்களிப்புக்கான நேரம் தொடங்கவில்லை என்பதோடு, வாக்களிப்புக்கான ஏற்பாடுகளும் முழுமை பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில் வாக்களிப்பு அறையில் சற்று நேரம் காத்திருந்த பின்னர் அஜித் வாக்களித்தார்.

வாக்களித்துவிட்டு அவர் வெளியே வந்தபோது அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் ‘தல, தல’ எனக் கூக்குரலிட்டனர்.