Home 13வது பொதுத் தேர்தல் வித்தியாச பதாகைகள் # 9: தாய்த் தமிழை தொடர்ந்து இழிவுபடுத்தும் தேசிய முன்னணி!

வித்தியாச பதாகைகள் # 9: தாய்த் தமிழை தொடர்ந்து இழிவுபடுத்தும் தேசிய முன்னணி!

708
0
SHARE
Ad

Worng-Tamil-banner---2மே 2 – நாடெங்கிலும் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளில் தேசிய முன்னணியின் பதாகைகள் பல தமிழ் மொழியை இழிவு படுத்தும் வகையில் அலங்கோலமாக – பிழைகளுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இதனை பலரும் சுட்டிக் காட்டியிருந்தாலும் இதைப் பற்றி தேசிய முன்னணியோ அதன் தலைவர்களோ கொஞ்சமும் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.

இதோ!

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியின் இன்னொரு அலங்கோல தமிழ்ப் பதாகை!

தமிழை எப்படியெல்லாம் கொலை செய்திருக்கின்றார்கள் என்று பாருங்கள்.

“தேசிய முன்னணிக்கு வாக்களியுங்கள்” என்ற வேண்டுகோளைக் கூட நல்ல தமிழில் எழுத முடியாதவர்கள் – இதைப் படித்துவிட்டு தமிழறிந்த தமிழன் ஒருவன் தேசிய முன்னணிக்கு ஓட்டும் போடுவான் என்று எப்படி இவர்கள் “நம்பிக்கை” வைத்திருக்கின்றார்கள்?