Home 13வது பொதுத் தேர்தல் பிகேஆர் கட்சியிலேயே தொடர்ந்து இருப்பேன் – சிலாங்கூர் மந்திரி பெசாராகும் ஆசை இல்லை – அஸ்மின்...

பிகேஆர் கட்சியிலேயே தொடர்ந்து இருப்பேன் – சிலாங்கூர் மந்திரி பெசாராகும் ஆசை இல்லை – அஸ்மின் அலி உறுதி

599
0
SHARE
Ad

Azmin Aliபெட்டாலிங் ஜெயா, மே 10 –  பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரான முகமட் அஸ்மின் அலி, தனது கட்சியின் மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக மக்கள் கூட்டணியிலிருந்து வெளியேரத் தயாராவதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.

காரணம் கடந்த புதன்கிழமை இரவு கிளானா ஜெயா அரங்கில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகள் தொடர்பான கருஞ்சட்டை போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்த அஸ்மின் அலி, தனது டிவிட்டர் வலைத்தளத்தில் “ பக்காத்தானின் தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்களை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள், பலவீனத்தை திருத்திக் கொள்ளுங்கள்,முன்னேறுங்கள், மக்கள் மீது கவனம் செலுத்துங்கள் அதைவிடுத்து நாட்டில் மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்வார் இப்ராகிமின் வலது கரம் எனக் கருதப்படும் முகமட் அஸ்மின் அலி, மக்கள் கூட்டணிக்கு எதிரான கருத்தை வெளியிட்டதால் அக்கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் ஆவதற்கு அஸ்மின் அலி பெரிதும் முயற்சி செய்து வந்தார். ஆனால் கட்சியின் மேலிடம் மீண்டும் காலில் இப்ராகிமையே அப்பதவிக்கு தேர்வு செய்தது. இதனால் மிகவும் அதிருப்தி அடைந்த அஸ்மின் அலி, கட்சிக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.

பிகேஆரில் தொடர்ந்து இருப்பேன்

இந்நிலையில் தன்னைப் பற்றி நிலவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்திப் பேசிய அஸ்மின் அலி, தான் தொடர்ந்து பிகேஆர் கட்சியிலேயே இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அதோடு தன்னை கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராகவும், புக்கிட் அந்தாரா பாங்சா சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்த மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்றும் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு தான் முயற்சிப்பதாகச் சொல்லப்படும் கருத்தை மறுத்த அஸ்மின் அலி, அப்பதவியை தான் வேண்டுமென்று நினைத்திருந்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலின் போதே பெற்றிருப்பேன் என்று தெரிவித்தார்.

காரணம் கடந்த 2008 ஆம் ஆண்டு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் முடிந்த சமயத்தில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தன்னை காலிட்டுக்கு பதிலாக சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவி வகிக்க கேட்டுக்கொண்டார் என்றும், ஆனால் தான் அதை மறுத்துவிட்டதாகவும் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.