மே 15 – இன்று பிரதமர் அறிவித்த புதிய அமைச்சரவையில் ம.இ.காவின் தேசியத் தலைவர் ஜி.பழனிவேல் சுற்றுச் சூழல் அமைச்சராகவும், தேசியத் துணைத்தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி பிரதமர் துறையின் துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர் என்பது குறிப்பிடத்தக்கது. செனட்டராக நியமிக்கப்பட்டு அதன் மூலம் துணையமைச்சராக இவர் பதவியேற்பார்.
ம.இ.காவின் உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன், இளைஞர் விளையாட்டுத் துறையின் துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலுசிலாங்கூர் தொகுதியில் ம.இ.கா, தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்டு வென்ற கமலநாதன் கல்வி துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பினாங்கு மாநில பிபிபி தலைவரான லோகா பாலமோகன் கூட்டரசுப் பிரதேச விவகார துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த துணையமைச்சர் பதவியைத்தான் முன்பு சரவணன் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.