Home உலகம் மக்களுக்காக கண்ணீர் சிந்திய ஆஸ்திரேலிய பிரதமர்

மக்களுக்காக கண்ணீர் சிந்திய ஆஸ்திரேலிய பிரதமர்

596
0
SHARE
Ad

juliaமே 17- ஆஸ்திரேலியாவில் மக்கள் எழுதிய கடிதத்தை படித்து வி்ட்டு, பிரதமர் ஜூலியா கில்லர்டு அழுதது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு மாற்று திறனாளிகளுக்கு பயனளிக்க கூடிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார்.

இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தால் ஏற்பட கூடிய நன்மைகளை விளக்கினார்.

#TamilSchoolmychoice

மக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் குறித்து கில்லார்டு பேசி கொண்டிருக்கும்போது உணர்ச்சிவசப்பட்ட ஜூலியா, குயின்ஸ்லேண்டர்ஸ் நகர மக்கள் தங்களது கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அழுதார்.

ஜூலியா பேசி முடித்து அமர்ந்த பின்னர், தொழிலாளர் கட்சியினர் மற்றும் மாற்று திறனாளி வழக்கறிஞர்கள் 20 பேர் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.