மேலும் “கடந்த 5 ஆண்டு கால பக்காத்தான் ஆட்சியில், கெடா மாநிலத்திலுள்ள சுகா மெனாந்தி அரங்கம், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானாதாக இருந்தது.
ஆனால் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கெடா மாநில மந்திரி பெசார் முக்ரிஸ் அதற்கு அனுமதியளிக்க மறுப்பது பாரபட்சத்துடன் நடந்து கொள்வது போல் உள்ளது.
அதோடு பக்காத்தான் ஆட்சியில் கெடா மாநில மக்களுக்கு வழங்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, அடக்குமுறை ஆரம்பமாகிறது” என்றும் ஹிஸ்யாவ் லியாங் தெரிவித்துள்ளார்.
சுகா மெனாந்தியில் உள்ள சுல்தான் அப்துல் ஹாலிம் அரங்கில் பக்காத்தான் சார்பாக நாளை பேரணி நடத்த முக்ரிஸ் மகாதீரிடம் அனுமதி கேட்டபோது, அப்பேரணியின் நோக்கம் குறித்து ஆராய வேண்டியுள்ளதால் அனுமதி வழங்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.