Home அரசியல் வாக்களிப்பு மையத்தில் மின்தடை – பிகேஆர் சார்பாக காவல்துறையில் புகார்

வாக்களிப்பு மையத்தில் மின்தடை – பிகேஆர் சார்பாக காவல்துறையில் புகார்

575
0
SHARE
Ad

Rafizi Ramliகோலாலம்பூர், மே 27 – பொதுத்தேர்தலில் போது கெடா மாநிலத்திலுள்ள ஒரு வாக்களிப்பு மையத்தில் நிகழ்ந்த மின்தடை குறித்து பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி இன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கூலிம் பண்டார் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்களிப்பு மையத்தில் வாக்குகள் எண்ணிக்கொண்டிருந்த போது மின்தடை ஏற்பட்டதாகவும், அது 15 நிமிடங்கள் நீடித்தது என்றும் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

வாக்குகள் எண்ணப்பட்ட அந்த பள்ளி கட்டிடத்தில் மட்டுமே மின்தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிகேஆர் முகவர் ஒருவரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் என்றும் ரம்லி கூறினார்.

#TamilSchoolmychoice

“பொதுத்தேர்தலில் இது போன்ற முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறினால், அக்குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் மறுக்கிறார். எந்த அடிப்படையில் அவர் இக்குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் என்பதை தெரிவிக்க வேண்டும்”, என்று ரபிஸி கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்தடை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு கருத்துரைத்துள்ள தேர்தல் ஆணையத் தலைவர் வான் அகமட், வாக்குகள் எண்ணப்பட்ட போது எந்த வாக்களிப்பு மையத்திலும் மின்தடை ஏற்படவில்லை. மின்வெட்டு ஏற்பட்டது போல் காட்டப்படும் புகைப்படங்கள் தேர்தலுக்கு முன்னதாக எடுக்கப்பட்டவை. தேர்தலைக் குறை கூறும் நோக்கில் அவை தற்போது வெளியிடப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.