Home இந்தியா பொட்டு சுரேஷ் வெட்டிக் கொல்ல ரூ25 லட்சம் கொடுத்த அட்டாக் பாண்டி!

பொட்டு சுரேஷ் வெட்டிக் கொல்ல ரூ25 லட்சம் கொடுத்த அட்டாக் பாண்டி!

959
0
SHARE
Ad
Pottu-Suresh-Sliderமதுரை, பிப்ரவரி 3 – மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக இருந்த பொட்டு சுரேஷை வெட்டிக் கொலை செய்ய கூலிப்படைக்கு மற்றொரு திமுக பிரமுகரான அட்டாக் பாண்டி ரூ25 லட்சம் கொடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
பொட்டு சுரேஷ் கடந்த வியாழனன்று மதுரையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு மற்றொரு திமுக பிரமுகரான அட்டாக் பாண்டி காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
பொட்டு சுரேஷ் மீண்டும் அரசியலில் தலைகாட்டியதை சகிக்காமல் அவர் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் 7 பேர் நேற்று சரணடைந்தனர். 7 பேரையும் வரும் 4-ந் தேதி வரை சிறையிலடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அவர்கள் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொட்டு சுரேஷ் கொலைக்கான வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அட்டாக் பாண்டி தொடர்ந்தும் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அட்டாக் பாண்டியை கொலை செய்ய கூலிப்படையிடம் பொட்டு சுரேஷ் ரூ20 லட்சம் பேரம் பேசியிருக்கிறார். ஆனால் இதை தெரிந்து கொண்ட அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷை கொலை செய்ய ரூ25 லட்சம் பேரம் பேசி அதே கூலிப்படை மூலம் அவரைக் கொலை செய்திருக்கின்றார் என்றும் கூறப்படுகிறது.