லாஸ்ஏஞ்சல்ஸ், ஜூன் 8 – பழம் பெரும் ஹாலிவுட் நடிகையும் , நீச்சல் வீராங்கணையுமான எஸ்தர் வில்லியம் காலமானார்.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் எஸ்தர் வில்லியம் (வயது 91), 1940-ம் ஆண்டு துவங்கி தனது 16 வயதில் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை வென்றார்.
பின்னர் அமெரிக்காவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.எம். நிறுவனம் இவரை சினிமாவில் நடிக்க வைத்தது. சினிமாவிலும் நடித்து புகழ்பெற்றார்.
கடந்த ஒரு வருடங்களாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். நேற்று தூக்கத்தில் உயிர் பிரிந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். சிறந்த நீச்சல் வீராங்கணையான எஸ்தர் வில்லியம், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார்.
அப்போது இரண்டாம் உலகப்போர் அறிவிக்கப்பட்டதால் இவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.எனினும் சினிமாவில் நடித்து உலகப்புகழ்பெற்றார். கடந்த 1945 துவங்கி 1994 -ம் ஆண்டு வரை நான்கு பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார்.
எஸ்தர் வில்லியம் மறைவிற்கு ஹாலிவுட் திரைஉலகம் இரங்கல் தெரிவித்துள்ளது.