Home உலகம் ஈரானுடன் பேச்சு நடத்தத் தயார்: ஒபாமா

ஈரானுடன் பேச்சு நடத்தத் தயார்: ஒபாமா

402
0
SHARE
Ad

வாஷிங்டன், ஜூன் 19- ஈரான் நாட்டுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

obama_350_042413081741அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதால் சர்வதேச அளவில் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு ஈரான் உள்ளானது. இப்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹசன் ரெüஹானி புதிய அதிபராகத் தேர்வாகியுள்ளார்.

அணு ஆயுத விஷயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளத் தயார் என்றும் ரெüஹானி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான “சார்லி ரோஸ்’ நேர்காணலில் இது தொடர்பாக ஒபாமா கூறியது:-

ஈரானுடன் பேச்சு நடத்த ஐ.நா. பாதுகாப்புப் கவுன்சிலை சேர்ந்த 5 நாடுகள் மற்றும் ஜெர்மனி அடங்கிய குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டது. இக்குழு மூலம் ஈரானுடன் மீண்டும் பேச்சு நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது.

அதே நேரத்தில் ஈரானில் மதத் தலைவர் அயதுல்லா கமேனியிடமும் அதிக அதிகாரம் உள்ளது. அவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட முன்வர வேண்டும். இத்தேர்தலில் ஈரான் மக்கள் முற்றிலும் மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த தேர்தலைப் போல இப்போது வன்முறைகள் இல்லை. எனவே அந்நாட்டுடன் பேச்சு நடத்த சாதகமான சூழ்நிலை உள்ளதாகவே கருதுகிறேன். இதனை ஈரான் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஒபாமா கூறினார்.

தொடர்ந்து ஆணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக தற்போதைய ஈரான் அதிபர் அகமது நிஜாத் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. ஆனால் ஈரான் அதனை மறுத்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ரெüஹானி புதிய அதிபராகத் தேர்வாகியுள்ளார். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான ஈரானின் உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

சீன அதிபருடன் பேசியது… இன்டர்நெட் மூலம் பிற நாடுகளை உளவு பார்ப்பது குறித்து சீன அதிபருடன் சமீபத்தில் பேசியது தொடர்பான கேள்விக்கு, “எனது நிர்வாகம் இதுபோன்ற செயல்களை ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்த்தும் வகையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் பேசினேன்.

ஒவ்வொரு நாடும் தங்களுக்கென்று உளவுத் தகவல்களை சேகரிப்பது வழக்கம்தான். ஆனால் இதற்கு ஓர் எல்லையுண்டு. ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருள் அமைப்பை சீன ராணுவம் உடைத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வடிவமைக்க முடியும். இது திருட்டுச் செயல். இதனை அமெரிக்காவால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக சீன அதிபரிடம் நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்தேன். இது அமெரிக்க – சீன உறவின் அடிப்படையை பாதிக்கும் செயல் என்பதைக் கூறினேன் என்றார் ஒபாமா.

அமெரிக்கர்கள் தொலைபேசியை அந்நாட்டு உளவுத் துறையினர் ஒட்டுக் கேட்பது, வெளிநாட்டவர்களின் இ-மெயில்களை உளவு பார்ப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டு குறித்தும் ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதில், உளவு அமைப்பினரின் செயலை நியாயப்படுத்திப் பேசிய ஒபாமா, “அமெரிக்காவின் நன்மையையும், பாதுகாப்பையும் கருதியே தேசிய பாதுகாப்பு அமைப்பு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அமெரிக்கர்களை பாதுகாப்பது எனது முக்கியக் கடமை. நீதிமன்றத்தின் உத்தரவு இன்றி எந்த தனிப்பட்ட அமெரிக்கரின் தொலைபேசியையும், இ-மெயிலையும் உளவு பார்க்க முடியாது என்பதே சட்டம். அச்சட்டத்தின்படியே நடந்து வருகிறோம்’ என்றார்.

குவாண்டனாமா சிறையை மூட பிரதிநிதி: சர்ச்சைகளில் சிக்கி வரும் குவாண்டனாமா சிறையை மூடும் நடவடிக்கைக்கான சிறப்புப் பிரதிநிதியாக மூத்த வழக்குரைஞர் சோலனை, அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாதிகள் அச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு மனித உரிமை மீறல்கள் நிகழ்வதாக குற்றச்சாட்டு உள்ளது.