Home வணிகம்/தொழில் நுட்பம் “இந்தியாவில் வெளிநாட்டு நலனுக்காக சிந்திக்கிறவர்கள் தான் அதிகம்” – டோனி பெர்னாண்டஸ் அதிருப்தி

“இந்தியாவில் வெளிநாட்டு நலனுக்காக சிந்திக்கிறவர்கள் தான் அதிகம்” – டோனி பெர்னாண்டஸ் அதிருப்தி

590
0
SHARE
Ad

tony_fernandez(1)டெல்லி, ஜூலை 11 – ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவரான டோனி பெர்னாண்டஸ், டாடா குழுமத்துடன் இணைந்து, இந்தியாவில் குறைந்த கட்டண விமான சேவை தொடங்கவுள்ளார். இது தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற அவர், அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயல் ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார்.

காரணம், இந்தியாவின் உள்நாட்டு விமான நிறுவனங்கள், தங்களது 5 ஆண்டு கால சேவையை நிறைவு செய்வதுடன், 20 சொந்த விமானங்களை வைத்திருந்தால் மட்டுமே வெளிநாட்டுக்கான சேவையை தொடங்க முடியும் என்ற ஒரு விதி உள்ளது.

இந்த விதி குறித்து கடுமையாக விமர்சித்த டோனி பெர்னாண்டஸ், அது அனேகமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயலோ அல்லது வேறு சிலரோ தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உருவாக்கிய விதி என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதே போல்,  ஏர் ஏசியா- டாடா குழும ஒப்பந்தத்தை  பற்றி கடுமையாக விமர்சித்து வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை பற்றி குறிப்பிட்ட டோனி, “இந்தியாவில் வெளிநாட்டு நலனுக்காக சிந்திக்கிறவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு என்ன தேவை என்பதைப் பற்றி சிந்திப்பதே இல்லை. இது அவமானமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும்,  “8 ஆண்டுகளுக்கு முன்பு இனி இந்தியாவுக்குள்ளேயே வரக்கூடாது என்று நினைத்தேன். ஏனெனில் சிலர் (விஜய் மல்லையா?) விமான சேவையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவர்கள் ஏராளமான பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தனர்.இப்போது அவ்வளவு பணத்தையும் இழந்து போய் நிற்கின்றனர்” என்று மறைமுகமாக பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்தார்.

இந்த சந்திப்பில் ஜப்பான் விமான சேவை நிறுவனத்துடன் ஏர் ஏசியாவின் இணைந்து செயல்பட்டது தோல்வி அடைந்தது பற்றி பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க,  “நீங்கள் நிறைய மனிதர்களை சந்தித்திருப்பீர்கள்.அவர்கள் நல்லவர்கள் என்று நினைத்திருக்கலாம். ஆனால் பின்னால்தான் தெரியும்.அந்த நபரால் எவ்வளவோ பெரிய இழப்பு என்பதை. நாங்கள் ஆரம்பித்த ஜப்பான் நிறுவனமும் அப்படித்தான்.ஒரு அழகான இளம் பெண்ணைப் போல்தான் தெரியும்.ஆனால் படுக்கை அறைக்குப் போனால் மோசமான அனுபவம்தான்.அதனால்தான் விரைவிலேயே விவாகரத்து வாங்கிவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரத்தன் டாடா பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, “நல்ல மனிதர்.அவருடன் இணைந்து செயல்படுவது நல்ல அனுபவம்.அதற்காக அவருடன் படுக்கை அறைக்கு எல்லாம் போகமாட்டேன்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.