Home நாடு தடுப்புக்காவல் மரணங்கள்: ஐ.பி.சி.எம்.சி யை அமைப்பதில் அரசாங்கம் இழுத்தடிக்கிறது – டோனி புவா

தடுப்புக்காவல் மரணங்கள்: ஐ.பி.சி.எம்.சி யை அமைப்பதில் அரசாங்கம் இழுத்தடிக்கிறது – டோனி புவா

492
0
SHARE
Ad

lock-up-deaths-400கோலாலம்பூர், ஜூலை 18 – தடுப்புக் காவலில் கடந்த 7 மாதங்களுக்குள் 11 பேர் இறந்த பிறகும் கூட, இன்னும் காவல்துறைப் புகார்கள் மற்றும் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் சார்பற்ற ஆணையத்தை (Independent Police Complaints and Misconduct Commission – ஐ.பி.சி.எம்.சி)  அமைப்பது குறித்து ஏன் இன்னும் விவாதம் நடந்து வருகிறது என்று ஜசெக வைச் சேர்ந்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார்.

“இது போன்று தடுப்புக்காவலில் மலேசியர்கள் இறப்பதை கண்டு அதற்கெதிரான உடனடி நடவடிக்கைகளை எடுக்காமல் , இப்படி இதயமின்றி நஜிப் தலைமையிலான அரசாங்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டே தான் இருக்கப்போகிறதா? என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது” என்று டோனி புவா இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பத்து காஜாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 26 வயது ஆடவரான சியூ சியாங் காப், நேற்று முன்தினம் மரணமடைந்தது குறித்து கருத்து கேட்ட போது டோனி புவா இவ்வாறு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கங்கார் காவல்துறை தலைமையகத்தில் கடந்த 60 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சியூ, ஜூலை 12 ஆம் தேதி பத்து காஜாவில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது 2013 ஆம் ஆண்டு வரை, 231 தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி, ஐ.பி.சி.எம்.சி தேவை இல்லை என்று வாதிட்டு வருகிறார்.