Home கலை உலகம் மதுரையில் இட்லி விற்கும் லட்சுமி மேனன்!

மதுரையில் இட்லி விற்கும் லட்சுமி மேனன்!

528
0
SHARE
Ad

‘பீட்சா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுபாராஜ் இயக்கும் அடுத்த படம் ‘ஜிகர்தண்டா’.

lakshmi-menonஇப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 7 வாரங்களாக மதுரையில் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது.

இப்படத்தில் லட்சுமி மேனன் ரோட்டோரத்தில் இட்லி சுட்டு, விற்பவராக வருகிறாராம். இதுகுறித்து லட்சுமிமேனன் கூறும்போது,

#TamilSchoolmychoice

நான் இப்படத்தில் இட்லி விற்பவராக வருகிறேன். என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக அமைவதற்கு படப்பிடிப்புக்கு செல்லும் முன் மதுரையில் உள்ள ரோட்டோர இட்லி கடைகளுக்கு சென்று, அவர்களின் விற்பனை முறையை தெரிந்து கொண்டேன். இதுபோன்று யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது.

இது ஒரு விறு விறுப்பான திகில்  படமாகும். இந்த படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியிருக்கிறேன். இந்த பாடலை மதுரையிலேயே படமாக்கினர். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.