Home இந்தியா சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு: வாகனங்கள் தீவிர சோதனை

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு: வாகனங்கள் தீவிர சோதனை

730
0
SHARE
Ad

மீனம்பாக்கம், ஆக. 13– சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

4F716186AA3DDEF71872178A445ABதீவிரவாதிகளின் நாசவேலையில் ஈடுபடலாம் என்ற உளவுத்துறையின் தகவலையொட்டி சென்னை விமான நிலையத்தில் கூடுதல் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைகள் செய்யப்படுகிறது. கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட எல்லா வாகனங்களும் விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதற்கு மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனையிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

indiaSecurity_1563905cவாகன நிறுத்தும் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அடிக்கடி சோதனை செய்யப்படுகின்றன. வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு மோப்ப நாய் போன்றவற்றின் மூலம் உடமைகளும் பரிசோதிக்கப்படுகின்றன.

துணை போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் மற்றும் மீனம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகிமை வீரன் தலைமையில் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் அங்கு வரக்கூடிய வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.