Home இந்தியா குஜராத் கலவரத்துக்காக இன்று வரை மோடி வேதனைப்படுகிறார்: ராஜ்நாத் சிங் தகவல்

குஜராத் கலவரத்துக்காக இன்று வரை மோடி வேதனைப்படுகிறார்: ராஜ்நாத் சிங் தகவல்

430
0
SHARE
Ad

புதுடெல்லி, செப். 2- குஜராத் கலவரத்துக்காக அம்மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி இன்று வரை வேதனைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார் என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று பா.ஜ.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு நிர்வாகிகள் பங்கேற்ற கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

narendra-modi2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் துரதிர்ஷ்டவசமானது என்பதை யாரால் தான் மறுக்க முடியும்? ஆனால், அந்த கலவரத்தை அப்போதைய முதல் மந்திரியான நரேந்திர மோடியே முன்நின்று நடத்தியதுபோல் பேசிவரும் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைகின்றனர்.

#TamilSchoolmychoice

இதன் மூலம், காங்கிரசும் இதர கட்சிகளும் இந்து-முஸ்லிம் மக்களிடையே பகையுணர்வை விதைத்து பலனை ஓட்டுகளாக அறுவடை செய்ய முயற்சி செய்து வருகின்றன.

மோடியின் தலைமையிலான குஜராத் அரசு எந்த பிரிவை சேர்ந்த மக்களையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதில்லை. இதற்கு ஆதாரம் தேவை என்று கருதுபவர்கள் குஜராத்துக்கு சென்று நேரில் பார்த்து வரலாம்.

2002ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தை எண்ணி இன்று வரை மோடி கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை அவரை தனியாக சந்தித்த தருணங்களில் நான் உணர்ந்துள்ளேன்.

நாங்கள் சிறுபான்மையின மக்களை வெறுப்பதாக குற்றம் சாட்டும் காங்கிரஸ் சாதியின் பெயரால் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

காங்கிரசில் குற்றச்சாட்டுக்கு மாறாக, எங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கும் உயர்ந்த பதவிகளில் ஷாநவாஸ் ஹுசேன், முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற தலைவர்களை நாங்கள் நியமித்துள்ளோம்.

பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெறும் கோவாவில் சிறுபான்மையினத்தை சேர்ந்த 5 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிரண்டு சமுதாயத்தை சேர்ந்தவர்களை வைத்துக் கொண்டே இந்தியாவை உயர்ந்த நாடாக மாற்றிவிட முடியாது. அனைத்து சமுதாயத்தின் பங்களிப்புடனும் தான் இந்த சாதனையை எட்ட முடியும் என்பதை நான் நன்றாக உணர்ந்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.